

சின்ன திரை நடிகை ஷோபனா சீனாவுக்குச் சென்றுள்ளார். மீனாட்சி சுந்தரம் தொடர் நிறைவடைந்த நிலையில், வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற தொடரிலும் கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடரிலும் நாயகியாக நடித்து வந்த இவர், ஒரே நேரத்தில் இரு தொடர்களில் நாயகியாக நடிக்கும் பெருமையைப் பெற்றார்.
இரு தொடர்களின் படப்பிடிப்பிற்கும் செல்வதால், ஓய்வுக்கு நேரமின்றி உழைத்துக்கொண்டிருந்த நடிகை ஷோபனா, மீனாட்சி சுந்தரம் தொடர் முடிவுக்கு வந்ததால், தற்போது வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் ஷோபனா நாயகியாக நடித்த நிலையில், இவருக்கு ஜோடியாக நடிகர் எஸ்.வி. சேகர் நடித்தார்.
தொடரின் கதையின்படி, 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயதுடைய ஷோபனாவை திருமணம் செய்துகொள்கிறார். பேரன், பேத்திகளெடுத்த வயதான முதியவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு இருவரும் தம்பதிகளாக சந்திக்கும் சம்பவங்களே மீனாட்சி சுந்தரம் தொடரின் கதைக்கருவாகும்.
இதில், எஸ்.வி. சேகர், நடிகை ஷோபனாக்கு தாலி கட்டும் விடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அவை அனைத்துமே இத்தொடருக்கு பலனளித்தது.
கலைஞர் தொலைக்காட்சியில் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களிடம் சேர்ந்த தொடராக மீனாட்சி சுந்தரம் மாறியது.
எனினும், தொடர் ஒளிபரப்பான 4 மாதங்களில் மீனாட்சி சுந்தரம் தொடர் முடிவுக்கு வந்தது. இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இதனிடையே தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளதால், நடிகை ஷோபனா சீனாவுக்குச் சென்றுள்ளார். ஹாங்காங் சென்றுள்ள அவர் அங்குள்ள புத்த மடாலயங்களுக்குச் சென்ற புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பூங்காற்று திரும்புமா தொடரில் இவரின் நடிப்பு பலரைக் கவர்ந்துள்ளதால், அந்தத் தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ்: இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார்யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.