பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற மாட்டாய்! அரோராவுக்கு குவியும் பாராட்டுகள்!

பிக் பாஸ் வீட்டில் இளவரசியாக வேடமேற்றுள்ள அரோரா, ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளார்.
அரோரா
அரோரா படம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் வீட்டில் இளவரசியாக வேடமேற்றுள்ள அரோராவின் செயல்கள் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் இருந்தாலும் யாருமற்ற தனிமையை உணர்வதாகவும், இதனால் பிக் பாஸிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கடந்த வாரம் அரோரா கூறியிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் பாடல், நடனம், நடிப்பு என பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நடிகையாக வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இல்லை என்றும், பிக் பாஸில் கிடைக்கும் பணத்திற்காக நாள்களைக் கடத்திக்கொண்டு இருப்பதாகவும் அரோரா கூறியிருந்தார்.

இத்தோடு மட்டுமின்றி, தனியாக அமர்ந்துகொண்டு, போட்டியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தனது எண்ணங்களை கடிதமாக எழுதிக்கொண்டிருந்தார். மிகவும் பலவீனமான போட்டியாளராக இருப்பதால், இந்த வாரத்தில் அரோரா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபர்களின் பட்டியல் (நாமினேஷன்) தேர்வு செய்யப்பட்டது. இதில் அரோரா உள்பட 10 பேர் இடம்பெற்றனர்.

இந்த வாரத்தில் அரோரா நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால், குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த வாரத்தில் கானா சாம்ராஜ்ஜியம் - தர்பீஸ் சாம்ராஜ்ஜியம் என மன்னர் ஆட்சி காலம் போன்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு நாட்டு அமைச்சரவையாக பிரிக்கப்பட்டு, அவர்களிடையே போர் (போட்டிகள்) நடைபெற்று வருகிறது.

வியானா உடன் அரோரா
வியானா உடன் அரோராபடம் - எக்ஸ்

இதில், தர்பீஸ் சாம்ராஜ்ஜியத்தில் மன்னராக உள்ள திவாகர் மீது காதல் கொண்ட இளவரசியாக அரோராவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. திட்டமிட்ட வசனங்கள் ஏதுமில்லை என்றாலும், அவரின் தோற்றம் மற்றும் ஆங்கிலம் கலந்த வசனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அரோரா
அரோராபடம் - எக்ஸ்

இத்தோடு மட்டுமின்றி தனிமையில் இருந்த அரோரா, இந்த போட்டியில் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து விளையாடுவது ஆரோக்கியமாக இருப்பதாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது அரோராவும் இளவரசி பாத்திரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இனி மாறும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சீரியல் முடிந்ததும் சீனாவுக்குச் சென்ற நடிகை ஷோபனா!

Summary

Bigg boss 9 tamil aurora sinclair as princess

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com