உண்மையான வெற்றி... அஜித்தை சந்தித்த சூரி நெகிழ்ச்சி!

நடிகர் அஜித் குமாரை சந்தித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி...
அஜித்துடன் சூரி.
அஜித்துடன் சூரி.
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித் குமாரை சந்தித்தது குறித்து நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சின்ன சின்ன வேடங்களில் நடிந்து வந்த நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காமெடி நடிகராக உயர்ந்தார். அதன்பின்னர், விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வேதாளம், ரஜினியின் அண்ணாத்தே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார்.

வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் மூலம், கதாநாயகன் வேடமெடுத்த சூரி, அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தன. கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலை ஈட்டின.

நடிகரும் ரேஸருமான அஜித் குமாரை நடிகர் சூரி சந்தித்து, அவருடனான அனுபவம் குறித்து இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.

அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது..❤️🙏🤝💐” எனப் பதிவிட்டுள்ளார்.

அஜித்துடன் சூரி.
மம்மூட்டியின் களம் காவல் டிரைலர்!
Summary

Actor Soori on meeting actor Ajith Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com