நடிகை ரோஜா புதிய திரைப்படமொன்றில் பாட்டியாக நடித்துள்ளாராம்.
1990 - 2000-களின் துவக்கம் வரை தமிழின் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நடிப்பில் வெளியான, ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ’உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பொட்டு அம்மன்’, ‘லூட்டி’ ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான படங்களாக இருக்கின்றன.
சினிமாவைவிட்டு அரசியலுக்குச் சென்றவர் ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்து நகரி தொகுதியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்தாண்டு தேர்தலில் தோல்வியடைந்ததால், மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ளார்.
90-களில் முக்கியமாக நாயகியாக இருந்தவர் அம்மா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது, லெனின் பாண்டியன் என்கிற திரைப்படத்தில் கங்கை அமரனுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். இதில், பாட்டி தோற்றத்தில் அவர் இருக்கும் விடியோவும் வெளியாகியுள்ளது.
நடிகை ரோஜா 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.