

பிரபல பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஹித், பதாய் தோ, மோனிகா ஓ மை டார்லிங், ஸ்திரீ போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் ராஜ்குமார் ராவ்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்குமார் நாயகனாக நடித்து வெளியான சிட்டி லைட்ஸ் எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா என்பவரை அவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர்கள் ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா தம்பதிக்குத் திருமணமாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று (நவ. 15) அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல், வருண் தவான், சோனம் கபூர், க்ருதி சனோன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆஸ்கர் போட்டியில் பா. ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.