பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகரின் வெளியேற்றம் தொடர்பாக...
திவாகர் / விஜய் சேதுபதி
திவாகர் / விஜய் சேதுபதிபடம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று(நவ. 9) 42 நாள்களை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களம் இறக்கப்பட்டனர்.

வைல்டு கார்டு மூலம் திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜன், அமித் பார்கவ் ஆகிய 4 பேர் நுழைந்தனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் வருகையால் போட்டி கடுமையானது.

கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறினர்.

இதனிடையே, இந்த வாரம் வெளியேறும் வாய்ப்புடையவர்கள் பட்டியலில் சுபிக்‌ஷா, கனி, வியானா, விக்ரம், சுபிக்‌ஷா, சாண்ட்ரா, ரம்யா, பார்வதி, கனி, திவாகர், திவ்யா மற்றும் அரோரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வாரம் இவர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்று வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று(நவ. 16) இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும்.

திவாகர் வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் திவாகர் பேசிய தகுதி, தராதரம் போன்ற வார்த்தைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி, விஜய் சேதுபதி அவரைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding Diwakar's eviction from the Bigg Boss show...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com