ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அண்ணாமலை குடும்பம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக தமிழில் அண்ணாமலை குடும்பம் என்ற தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மை காலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கெட்டி கேளம், பாரி ஜாதம் உள்ளிட்ட தொடர்களும் குடும்ப ஒற்றுமையைப் பிரதானப்படுத்தியே எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் அண்ணாமலை குடும்பம் என்ற புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் வரும் 24 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண்ணுக்கும் அவர் வீட்டுக்குள் வரும் மருமகள்களுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
பழைய கதையாக இருந்தாலும் புதுமையான முறையில் எடுக்கப்படுவதால், இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முழுமையான தகவல் தெரியவரும்.
Summary
The broadcast date and time of the Annamalai Kudumbab series, which will be aired on Zee Tamil TV, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

கயல் தொடரில் புது முகங்கள்! கதைக்களம் மாறுகிறது!

மூன்று நாயகர்கள் நடிக்கும் காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு தேதி!
விடியோக்கள்

கொளத்தூர் தொகுதி வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்! | Kolathur | MK Stalin |



