ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்
ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்தின் 173 ஆவது படம் உருவாகவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, ரஜினியின் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

இதனால், ரஜினி - 173 படத்தின் இயக்குநர் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ரஜினி - 173 படத்தை நடிகரும் இயக்குநருமான தனுஷ் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த தனுஷ் எப்படி ரஜினியின் படத்தை இயக்குவார்? என்ற கேள்விகளும் ஊடகங்களில் எழும்புகின்றன. இருப்பினும், ரஜினி - 173 படத்தின் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வமான எந்தவொரு அறிவிப்பும் பெறப்படவில்லை.

ரஜினி - சுந்தர் சி கூட்டணிக்கான காரணம் கதையா? இசையமைப்பாளரா? என்ற சந்தேகக் கேள்விகளே ஓயாத நிலையில், தற்போது ரஜினி - 173 படத்தின் இயக்குநராக தனுஷை வைத்தே நெட்டிசன்களின் உலகில் படம் இயக்கி வருகின்றனர்.

இதையும் படிக்க: டாம் க்ரூஸுக்கு ஆஸ்கர் விருது!

Summary

Dhanush in talks to direct Rajinikanth?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com