நடிகை கயாது லோஹர் தன் மீது எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்.
டிராகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான நாயகியாக உருவானவர் நடிகை கயாது லோஹர். தொடர்ந்து, எஸ்டிஆர் - 49, இதயம் முரளி உள்பட 5 தென் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, புதிய தயாரிப்பாளர் ஒருவர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்ததும் கயாது லோஹருக்கு அத்தயாரிப்பாளர் இரவு பார்ட்டிகளில் பங்கேற்க பணம் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின.
இது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து கயாது லோஹர் எதுவும் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேர்காணலில், நம்மைச் சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்களைக் கையாள்வது குறித்த கேள்விக்கு கயாது லோஹர், “இதைக்குறித்து நான் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். நடக்காத ஒரு விஷயத்தில் நம்மை இனைத்து பலரும் பேசுவதைக் கடந்து வருவது எளிதானதல்ல. ஒன்றுமே செய்யாத என்னை ஏன் குறி வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
நடிகையாக இருப்பது; என்னுடைய சூழல் ஆகியவைக் கொண்டு இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அண்மை காலமாக என்னைக் குறித்து வரும் கருத்துகள் உண்மையிலேயே அதிகமானக் காயத்தைக் கொடுத்துவிட்டது. இதையெல்லாம் சுலபமாகக் கடந்துவிடலாம் என நினைக்கலாம். ஆனால், அது எளிதானதல்ல. காயம் காயம்தான்.” எனக் கண்கலங்கியபடி கூறினார்.
இதையும் படிக்க: ரஜினியை இவர் இயக்கினால் எப்படி இருக்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.