பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பதாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கருத்து..
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் படம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பதாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தனிப்பட்ட முறையிலும் சரி, போட்டி மனப்பான்மையிலும் சரி மோசமான போட்டியாளர்களாக இருப்பதாக திவாகர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளுக்குள் சிக்கிய திவாகர் 42 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார்.

6 வது வார இறுதியில் வெளியேறத் தகுதியான நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றப்படும்போது திவாகர் / விஜய் சேதுபதி
வெளியேற்றப்படும்போது திவாகர் / விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்துவெளியேறிய பிறகு விடியோ மூலம் நேர்காணல் ஒன்றில் பேசிய திவாகர், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மோசமானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு, வெளியே வந்த பிறகு போட்டியாளர்கள் அனைவரும் மோசமானவர்கள் எனப் பேசுவது ஏற்புடையதல்ல என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரி, அர்ச்சனா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்களாகவும் இருந்து தங்கள் கருத்துகளை அழுத்தமாக முன்வைத்தனர்.

அவர்களிடம் நேர்மை இருந்தது. ஆனால் இம்முறை பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குழுக்களாக சேர்ந்துகொண்டு விளையாடுகின்றனர். தனிப்பட்ட முறையிலும் நாடகமாடுபவர்களாக இருக்கின்றனர் என திவாகர் குறிப்பிட்டுள்ளார்.

பிரவீன்ராஜ் மோதல்
பிரவீன்ராஜ் மோதல்படம் - எக்ஸ்

மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரவீன்ராஜ், சிறந்த போட்டியாளராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சரியான நபராக இல்லை. மக்கள் இதற்கு வாக்களிக்கமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் ஒருமாதிரி இருப்பதால் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்பதை என்னால் கூற முடியாது என திவாகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? பிரவீன்ராஜ் விளக்கம்

Summary

Bigg boss 9 tamil watermelon star diwakar controversy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com