புனிதா தொடரின் நாயகன் மாற்றம்!

புனிதா தொடரின் நாயகன் மாற்றம் தொடர்பாக..
சுரேந்தர், கார்த்திக்
சுரேந்தர், கார்த்திக்
Published on
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா தொடரில் நாயகன் மாற்றப்பட்டுள்ளார்.

கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இந்தத் தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா என்ற புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கபிலன் பாத்திரத்தில் கார்த்திக் வாசு நடித்து வந்தார்.

கார்த்திக் வாசு புனிதா தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் சுரேந்தர் நடிக்கவுள்ளார்.

நடிகர் சுரேந்தர் மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்றவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சுரேந்தர் வருகையானது, தொடரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தாய் மற்றும் வளர்ப்பு மகள் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை பிரதானப்படுத்தி புனிதா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

புனிதா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Summary

The hero has been changed in the series Punitha, which is aired on Sun TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com