உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

துரந்தர் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ரன்வீர் சிங் பேசியதாவது...
Ranveer Singh
ரன்வீர் சிங். படம்: இன்ஸ்டா / ரன்வீர் சிங்.
Published on
Updated on
1 min read

நடிகர் ரன்வீர் சிங் துரந்தர் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும் எனப் பேசியுள்ளார்.

சர்வதேச அளவில் செல்லும் அளவுக்கு இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இது பித்துப்பிடித்தபோல ஒரு டிரைலர். இதில் நானும் பங்குபெற்றுள்ளேன் என்பது பெருமையாக இருக்கிறது.

நமது சினிமாவை உலக அரங்கில் கொண்டுசெல்ல, ஏதொவொன்றின் எல்லையை உயர்த்த பங்காற்றியதில் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இந்திய சினிமாவை உலக அரங்கின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

கடினமான, பல அடுக்குகள் கொண்ட கதையை சிறப்பான தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கியுள்ளார்கள்.

குறிப்பாக ஒளிப்பதிவாளர் உருவாக்கியவை உலக திரைப்படங்களுக்கு இணையானவை என்றார்.

இதன் இயக்குநர், “மொழிகள் குறித்து கவலையில்லை. இந்தியா சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும். கொரிய படமான பாரசைட் போல் நமது படங்களும் செல்ல வேண்டும்” என்றார்.

இந்தப் படம் வரும் டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Summary

Actor Ranveer Singh on Tuesday said with his upcoming film "Dhurandhar", they've tried to push the envelope and have made something that is of international level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com