

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதியிடம் கமருதீன் கேட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விஜே பார்வதி - கமருதீன் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக (வீட்டுத் தல) எஃப்.ஜே. தேர்வாகியுள்ளார்.
வீட்டு வேலைகளை மூன்று அணிகளாகப் பிரிந்து செய்வதையே இந்த வாரத்திற்கான போட்டியாக பிக் பாஸ் கொடுத்துள்ளார். இதில், சமையல் செய்யும் அணியில் பார்வதி இடம்பெற்றுள்ளார். வீட்டை சுத்தப்படுத்தும் அணியில் கமருதீன் இடம்பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியின் இடையிடையே பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இடம்பெற வேண்டும் என பிக் பாஸ் நிபந்தனை விதித்திருந்தார்.
பொழுதுபோக்கிற்காக அமித் பார்கவ் உடன் இணைந்து மனைவி வேடத்தில் பார்வதி நடித்துக்கொண்டிருந்தார். அமித்தின் தங்கை வேடத்தில் வியானாவும் நடித்துக்கொண்டிருந்தனர்.
தங்கை வியானாவின் திருமணத்திற்கு நகைகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்த அமித் பர்கவிடம் மனைவியின் பாத்திரத்தில் பார்வதி பேச்சிக்கொண்டிருக்கும்போது இடையே வந்த கமருதீன், உங்களுக்கு எத்தனை கணவர் எனக் கேட்டுவிட்டுச் சென்றார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த அனைவருமே அதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டு சிரித்தாலும், பார்வதி கடுமையாக பாதிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் தன்னைத் தாக்கி அந்த கேள்வியை எழுப்பியுள்ளதாக பார்வதி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பிக் பாஸ் வீட்டில் வேறு யார் இந்தக் கேள்வியை கேட்டிருந்தாலும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும், நான் மிகவும் நெருக்கமாக நினைத்த கமருதீன் அக்கேள்வியை கேட்டது மிகுந்த வருத்தமளிப்பதாக பார்வதி குறிப்பிட்டிருந்தார்.
கமருதீனின் கேள்வியில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டியதை விஜே பார்வதி பிரச்னையாக்குவதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.