நடிகை கிரேஸ் ஆண்டனி தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி ஹேப்பி வெட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்பலாங்கி நைட்ஸ் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துவிட்டார்.
இறுதியாக, தமிழில் இயக்குநர் ராம் இயக்கிய பறந்து போ படத்திலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
அண்மையில், இவருக்கும் இசையமைப்பாளர் அபி டாம் சிரியாக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் 15 கிலோ எடையைக் குறைத்ததாக கிரேஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார். இதற்கான புகைப்படங்களை வெளியிட்டு, “இந்தப் பயணம் சாதாரணமாக இருக்கவில்லை. அமைதியான போராட்டத்துடன் பல நாள்கள் உடைந்து அழுதிருக்கிறேன். இதைச் செய்ய வேண்டுமா? என நிறைய முறை சந்தேகங்கள் எழுந்தன. இறுதியாக, எனக்குள் இருந்த புதியவளைக் கண்டுகொண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.