காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்

கல்லூரி மாணவர்களிடையே கவின் பேச்சு...
kavin
கவின்
Published on
Updated on
1 min read

நடிகர் கவின் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளர். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆண்ட்ரியா தயாரித்துள்ளார். இப்படம் நாளை (நவ. 21 திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

இந்த நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின், “மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு திரையரங்கம் செல்ல வேண்டாம்.

உங்கள் கல்லூரி கடமைகளை முடித்துவிட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் சென்று பார்க்கலாம். சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட் தான். அதனால், அதற்குள் எண்டர் ஆகி உடனே எக்ஸிட் (வெளியேற) ஆகவும் வேண்டும். அதுதான் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor kavin advised 'dont bunk the collage for cinema' to students,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com