
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் வரும் நாளை(நவ. 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்துள்ள திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டீசல் திரைப்படம் ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி மொழிப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
நீரஜ் கவான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சசிகுமார் - சூர்யா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள நடுசென்டர் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த இணையத் தொடரில் சசிகுமார் (பயிற்சியாளராக), கலையரசன், ஆஷா சரத், ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான படம் தண்டகாரண்யம்.
மலைவாழ் மக்களுக்கும் அதிகார அமைப்பிற்கும் இடையான மோதலை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.
இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் தம்பி ராமையா, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் முருகேசன் +2.
இந்தத் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றதுடன் சாய் அபயங்கரின் இசையும் கவனம் ஈர்த்திருந்தது.
டியூட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஜெயின்ஸ் நானி இயக்கத்தில் கிரண் அப்பாவரம் - யுக்தி தரேஜா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் கே-ராம்ப்.
கே-ராம்ப் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நீரஜா கோனா இயக்கத்தில் சித்து ஜொன்னலட்டா, ஸ்ரீநிதி ஷெட்டி - ராஷி கன்னா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தெலுசு கதா.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.