இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

ரவி மோகனின் ப்ரோ கோட் பெயர் குறித்து...

News image

ரவி மோகன்

Updated On :21 நவம்பர் 2025, 11:39 am

ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரைத் தடுக்கக்கூடாது என மதுபான நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ப்ரோ கோட் படத்தை கார்த்தி யோகி இயக்குகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ப்ரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஏனெனில், இந்நிறுவனமும் ப்ரோ கோட் என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், "ஒரே மாதிரியான வணிகச் சின்னத்தைப் பயன்படுத்துவது முதல் பார்வையிலேயே விதிமீறல் எனத் தெரிவதாகவும் இதனால், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆகையால், வழக்கு முடியும்வரையில் திரைப்படத்தின் விளம்பரங்களுக்கோ வெளியீட்டுக்கோ ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ரவி மோகன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், “ரவி மோகனின் ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரைப் பயன்படுத்த மதுபான நிறுவனம் தடுக்கக்கூடாது” என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.