

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி அண்மையில் வெளியாகி அசத்தலான வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.
அதேநேரம், பாடலின் இறுதியில் அனிருத், விஜய்யிடம் ‘கடைசியா ஒரு டான்ஸ்..’ எனக் கேட்கிறார். அதற்கு விஜய் சரி என்கிறார்.
இந்த வசனம் இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பதையே குறிப்பதால் அவரது ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிகழ்வில் விஜய், எச். வினோத், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதால் ஏராளமான தமிழர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: சாலிகிராமத்தின் Money Heist! கவினின் மாஸ்க் - திரை விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.