சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம் தொடர்பாக...
விஜே மோகனா
விஜே மோகனா
Published on
Updated on
1 min read

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணெ தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில நாள்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளது.

சிங்கப் பெண்ணே தொடர் 2023 அக்டோபர் 9 ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள், ஆட்சியராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார்.

மேலும் இந்தத் தொடரில் அமல்ஜித், தர்ஷக் கெளடா, விஜே பவித்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர், 650 நாள்களைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், சிங்கப் பெண்ணே தொடரில் ஜெயந்தி பாத்திரத்தில் நடித்து வந்த தரணி ஹெப்சிபா மாற்றப்பட்டுள்ளார். இனி வரும் எபிசோடுகளில் நடிகை விஜே மோகனா நடிக்கவுள்ளார்.

Summary

One of the main actresses in the series Singa Penne has been replaced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com