

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த வெளியேற்றத்தின்போது, நடிகை சான்ட்ரா உடைந்து அழுத விடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வது வாரத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
அதன்படி, இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் அமித் பார்கவ், சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவ்யா கணேசன், பிரஜின், சபரி, கனி திரு, கெமி, விக்ரம், அரோரா, வியானா, பார்வதி மற்றும் சான்ட்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் கெமி, பிரஜனைத் தவிர அனைவரும் காப்பற்றப்பட்ட நிலையில், இவர்கள் இருவரையும் பிக் பாஸ் காரில் ஏறச் சொல்கிறார். காரில் கெமி மற்றும் பிரஜின் ஏறுகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டாகும் (வெளியேறும்) நபர் காரில் இருந்து அப்படியே வெளியே செல்வார் என்றும், போட்டியில் தொடரும் நபர், அதே காரில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வருவார் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக தம்பதியாக பிரஜன் - சான்ட்ரா வந்த நிலையில், தனது கணவர் பிரஜன் வெளியே சென்றுவிடுவார் என்று நினைத்து, நடிகை சான்ட்ரா உடைந்து அழும் காட்சிகள் முன்னோட்டக் காட்சியில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் கெமி வெளியேறியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இன்று(நவ. 23) இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் தெரியவரும்.
இதற்கு முன்பு நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 பேர் உள்ளனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய நடிகை யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.