பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய நடிகை யார்?

பிக் பாஸ் சீசன் 9 போட்டியிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள நடிகை குறித்து...
பிக் பாஸ் இல்லத்தில் அரோரா உடன் நடிகை கெமி
பிக் பாஸ் இல்லத்தில் அரோரா உடன் நடிகை கெமி படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 போட்டியிலிருந்து இந்த வாரம் நடிகை கெமி வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வழங்கும் போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்து வந்தாலும், மற்ற பிரச்னைகளில் இருந்து அவர் விலகி இருந்ததால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. 49 வது நாளான இன்று இந்த வாரத்தில் யார் வெளியேறுவார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் அமித் பார்கவ், சுபிக்‌ஷா, ரம்யா ஜோ, திவ்யா கணேசன், ப்ரஜின், சபரி, கனி திரு, கெமி, விக்ரம், அரோரா, வியானா, பார்வதி மற்றும் சான்ட்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் ரம்யா ஜோ, திவ்யா கணேசன், அரோரா, சான்ட்ரா ஆகியோரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத வகையில் கெமி வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் டாஸ்க்குகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவராக இருந்தாலும் மக்கள் மனங்களைக் கவர தவறிவிட்டார். மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் கெமி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கெமி
கெமி

இதற்கு முன்பு நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து

Summary

Bigg boss 9 tamil actress kemy evicted vijay sethupathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com