பிக் பாஸ் 9: வெளியேறிய கெமிக்கு கண்ணாடியை பரிசளித்த விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியில் இருந்து வெளியேறிய நடிகை கெமிக்கு நடிகர் விஜய் சேதுபதி அளித்த பரிசு குறித்து...
விஜய் சேதுபதி, கெமி
விஜய் சேதுபதி, கெமிபடம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 போட்டியில் இருந்து வெளியேறிய நடிகை கெமிக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது கண்ணாடியை பரிசளித்தார்.

பிக் பாஸ் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த கெமி, மேடையில் அழத் தொடங்கியபோது அதனை மறைத்துக்கொள்ள தனது கண்ணாடியை அவருக்கு அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட கெமி, புன்னகையுடன் சக போட்டியாளர்களிடம் பேசிவிட்டுச் சென்றார்.

அவர் செல்லும்போது, 'இந்தக் கண்ணாடியை நான் எடுத்துக்கொள்ளலாமா?' எனக் கேட்டதற்கு 'இது என் உழைப்பில் வாங்கிய கண்ணாடி, அதனை உங்களுக்கு பரிசளிக்கிறேன். நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்' என பதிலளித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 போட்டியில் இருந்து 7 வார இறுதியில் நடிகை கெமி வெளியேற்றப்பட்டார். ப்ரஜின், சான்ட்ரா, திவ்யா கணேசன், விக்ரம் உள்ளிட்ட 10 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்ததில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக கெமி வெளியேற்றப்பட்டார்.

மேடையில் விஜய் சேதுபதி அருகே நின்று பேசும்போது, பிக் பாஸ் வீட்டில் தனது நாள்களை நினைத்து கண் கலங்கினார். நிஜ வாழ்வில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், ஒருவேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இத்தனை பேருடன் இந்ததும், மூன்று வேலை சமைத்து சாப்பிட்டது நிறைவளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அப்போது கண் கலங்கிய கெமிக்கு, தனது கண் கண்ணாடியை விஜய் சேதுபதி கழற்றிக் கொடுத்தார். அதனை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட கெமி, மிகுந்த உற்சாகத்துடன் போட்டியாளர்களை சந்தித்துப் பேசி விடை பெற்றார்.

கெமியுன் விஜய் சேதுபதியும்
கெமியுன் விஜய் சேதுபதியும்படம் - எக்ஸ்

அவர் புறப்படும்போது மேடையில் இருந்து இறங்கியதும், 'இந்தக் கண்ணாடியை எடுத்துக்கொள்ளலாமா?' எனக் கேட்டார். இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, 'தாராளமாக, அது என் உழைப்பில் வாங்கியது. அதனை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.

பின்னர் போட்டியாளர்களை சந்திக்கும்போது வேறு கண்ணாடியை விஜய் சேதுபதி அணிந்திருந்தார். அந்தக் கண்ணாடியை கெமிக்கு கொடுத்துவிட்டீர்களா? என போட்டியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆம் என பதிலளித்தார். துபையில் நேற்று வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு ஆச்சரியத்தில் ஆழ்ந்த போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, கொடுக்க வேண்டும் என்ற மனம் தான் முக்கியம். எங்கு வாங்கியது. எவ்வளவுக்கு வாங்கியது என்பது முக்கியமல்ல எனக் குறிப்பிட்டார். விஜய் சேதுபதி கொடுத்த கண்ணாடி என்ன விலை என சமூக வலைதளப் பக்கங்களில் பலர் தேடி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!

Summary

Bigg boss 9 tamil vijay sethupathi gift to actress kemy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com