நடிகர் தர்மேந்திரா உடல் தகனம்

மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல் இன்று (நவ. 24) மாலை தகனம் செய்யப்பட்டது.
தர்மேந்திரா
தர்மேந்திராபிடிஐ (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல் இன்று (நவ. 24) மாலை தகனம் செய்யப்பட்டது.

மும்பையில் உள்ள பவன் ஹான்ஸ் தகன மேடையில் அவரின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்த பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

தர்மேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் அமிதாப் பச்சன், ஆமிர் கார் உள்ளிட்ட திரைப் பிரலங்களும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். இவருக்கு பிரகாஷ் கெளர், ஹேமமாலினி என இரு மனைவிகளும், நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல் உள்பட 6 வாரிசுகள் உள்ளனர்.

இவரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற பவன் ஹான்ஸ் தகன கூடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதனால், அப்பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் தர்மேந்திரா அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்து பிறகு வீடு திரும்பினார்.

எனினும் இதற்கு முன்பே அவர் உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்தவாறே சிகிச்சையில் இருந்த தர்மேந்திரா, இன்று காலை உயிரிழந்தார். இதனை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்தார்.

பிரபலங்கள் - தலைவர்கள் அஞ்சலி, இரங்கல்

பாலிவுட்டின் திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் தர்மேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஆமிர் கான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தர்மேந்திராவின் மறையாத புகழ்

1935 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த தர்மேந்திரா 1960 ஆம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து பந்தினி, பூல் அவுர் பத்தர், ஷோலே, சுப்கே சுப்கே, சீதா அவுர் கீதா உள்ளிட்ட வெற்றிகளின் மூலம் பாலிவுட்டின் தலைசிறந்த நாயகரானார். சினிமாவில் முதல் பாதியில் காதல் மன்னனாக இருந்த தர்மேந்திரா, பின்னர் ஆக்‌ஷன் நாயகனாக மாறி அதிரடிப் படங்களில் நடித்தார்.

ஜானி கதார் மற்றும் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அவரது இறுதிப் படமான இக்கிஸ் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இதையும் படிக்க | தர்மேந்திரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

Summary

Veteran actor Dharmendra Cremated In Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com