

அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானியாக (விஜய் சேதுபதி வில்லன்) நடிக்க வேண்டும் என்று வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குநர் ராஜபாண்டி இயக்கி நடித்த திவ்யா திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிக் பாஸ் பிரபலம் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டு திவ்யா திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,
”இந்தப் படத்தில் நடித்தவர்கள் எல்லாம் புது முகமாக இருந்தார்கள், முதலில் நடிப்பதற்கு ஒரு சிலர் கஷ்டப்படுவார்கள். அதெல்லாம் இல்லாமல் இயற்கையாக நடித்தார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது சசிகுமார் அண்ணன் எடுத்த நந்தன் படம் போன்ற உணர்வு எனக்கு இருந்தது.
இயக்குநர் சசிகுமார் அண்ணனைபோல் இவர்கள் பல சமுதாய சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். திவ்யா திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன்.
இந்தப் படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்பதை போல நானும் எதிர்பார்க்கிறேன், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நான் நடித்த முதல்படமே விஜய் சேதுபதியின் ஏஸ் படம்தான். அனைவரும் நடிகர் விஜய் சேதுபதிபோல நடிக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் அழைப்பு வந்தால் நாயகனாக நடிப்பேன்.
அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானியாக (விஜய் சேதுபதி வில்லன்) நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.