உங்களுக்கு அதிக ரசிகர்கள்: பிக் பாஸ் போட்டியாளர்களைப் புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளது குறித்து...
பிக் பாஸ் வீட்டில் கீர்த்தி சுரேஷ்
பிக் பாஸ் வீட்டில் கீர்த்தி சுரேஷ் படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தனது, ரிவால்வர் ரீட்டா படம் திரையரங்குகளில் வெளியாவதையொட்டி, அதன் புரமோஷன் பணிகளுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் சென்ட்ராயன், மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் சுரேஷ் ஆகியோர் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கும் இசைக்கலைஞர் எஃப்.ஜே., கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

50 வது நாளையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பாடலுடன் ஆட்டம் பாட்டமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் கீர்த்தி சுரேஷை வரவேற்றனர்.

போட்டியாளர்களுடன் கீர்த்தி சுரேஷ்
போட்டியாளர்களுடன் கீர்த்தி சுரேஷ்படம் - எக்ஸ்

தற்போது பள்ளி சீருடையில் போட்டியாளர்கள் இருப்பதால், உண்டு உறைவிடப் பள்ளியாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது.

ஆசிரியையாக வேடமேற்றுள்ள விஜே பார்வதி, கீர்த்தி சுரேஷுக்கு பிக் பாஸ் வீட்டை சுற்றிக்காட்டினார். தொலைக்காட்சியிலேயே பார்த்த வீட்டை தற்போது நேரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கீர்த்தி குறிப்பிட்டார்.

பின்னர், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளியே அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை பிக் பாஸ் வீட்டினர் வியப்புடன் கேட்டனர்.

அனைவரிடமும் அறிமுகமானதும், ரிவால்வர் ரீட்டா படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசினார். இந்தப் படம் டார்க் ஹீயூமர் படம் என்றும், ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால், ரசிகரகளுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என கீர்த்தி சுரேஷ் பேசினார்.

பிக் பாஸ் வீட்டிற்கு வாரமொரு சிறப்பு விருந்தினர் தங்கள் படத்தின் புரமோஷனுக்காக வருவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!

Summary

keerthy suresh in bigg boss 9 tamil for revolver rita

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com