

வைல்டு கார்டில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்துள்ளார்.
திவ்யா திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் பிக் பாஸ் பிரபலம் திவாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பிக் பாஸை ஸ்கிரிப்ட் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், பிக் பாஸில் எந்த வித ஸ்கிரிப்டும் கிடையாது. அனைவரும் என்னை மெலிந்து விட்டீர்கள் என்று கூறுகின்றனர்.
நாங்கள் பிக் பாஸில் உள்ளே சென்றவுடன், எங்களை அடைத்து விடுவார்கள், அங்கு நடந்த அனைத்துமே உண்மை. நிறைய ரிவியூவர்கள் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டிற்கு தட்டுப்பாடு, அவர்கள் சொல்லும் டாஸ்கை நாங்கள் செய்துகொண்டே இருப்போம். ஒரு ஸ்கூலில் படித்தால்கூட ஃபிரீயாக இருப்போம், நான் பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலைகளைக் கற்றுக் கொண்டேன்.
வெவ்வேறு குணமுடைய 20 பேர், ஒரு இடத்தில் இருந்தால், எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். நான் பிக் பாஸில் இருந்து வெளியேறியவுடன் குழந்தைகள் நிறைய பேர் அழுக ஆரம்பித்து விட்டார்கள். நடிப்பு அரக்கன் என்ற சொல் குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை வைரலானது.
பிக் பாஸில் டைட்டில் வின்னர் யார் வருவார் என இப்போதைக்கு சொல்ல முடியாது, பிக் பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே நுழைந்தால் இன்னும் விளையாட்டு மாறலாம்.
மதுரை மீனாட்சி தாயின் அருளால் பிக் பாஸுக்கு சென்றேன். வைல்டு கார்டில் மீண்டும் பிஸ் பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நிச்சயம் செல்வேன்” என்றார்.
மக்கள் கோரிக்கையை ஏற்று பிக் பாஸ் குழு மீண்டும் திவாகரை அனுப்புவார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானி: வாட்டர் மெலன் ஸ்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.