ராப் பாடகர் வேடன்
ராப் பாடகர் வேடன்(கோப்புப் படம்)

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து...
Published on

பிரபல ராப் பாடகர் வேடன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள ராப் பாடகர் வேடன். இவர், மஞ்ஞுமல் பாய்ஸ், நரிவேட்டை போன்ற மலையாள திரைப்படங்களில் ராப் பாடல்களை பாடியுள்ளார். மேலும், மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படத்திலும் ‘றெக்க றெக்க’ எனும் பாடலை பாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் (கான்சர்ட்) நடத்தி வந்தார். மேலும், வரும் நவ.28 ஆம் தேதி கத்தார் நாட்டில் வேடனின் இசை நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீர் உடல் நலக் குறைவால் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதனால், கத்தாரில் நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, துபையில் கடந்த நவ.23 ஆம் தேதி நடைபெற்ற வேடனின் இசை நிகழ்ச்சியில் கடுமையான காய்ச்சலுடன் அவர் பங்கேற்று பாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சினிமாவிலிருந்து விலகும் விஜயலட்சுமி!

Summary

It has been reported that popular rapper Vedan has been admitted to the hospital due to a sudden health condition.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com