நடிகை விஜயலட்சுமி சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் அகத்தியனின் மகள்களில் ஒருவர் விஜயலட்சுமி. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையிலிருந்தவருக்கு சென்னை 28 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சுல்தான் தி வாரியர் என்கிற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படத்திற்காக சில நாள்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவும் செய்தார். ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக விஜயலட்சுமி நடித்தார். இறுதியாக, மிடில் கிளாஸ் திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.
இந்த நிலையில், விஜயலட்சுமி தன் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமா படப்பிடிப்பு நாள்களால் தன் அன்றாட செயல்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கதாநாயகியான லிவிங்ஸ்டன் மகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.