

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயிலர் - 2’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், கோவாவில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.