

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் சம்யுக்தா சண்முகநாதன். துக்ளக் தர்பார், வாரிசு, மதராஸ் மாஃபியா கம்பெனி உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனுடன் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், விளம்பர மாடலாகவும் நடித்து வருகிறார்.
திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்த சம்யுக்தாவுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், சம்யுக்தாவுக்கும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
அனிருதா ஸ்ரீகாந்த்தும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதன் முதலில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் அஞ்சான்: லிங்குசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.