ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

முதன் முதலில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் அஞ்சான்: லிங்குசாமி

அஞ்சான் மறுவெளியீடு குறித்து லிங்குசாமி...

suriya and lingusamy

லிங்குசாமி, சூர்யா

Published On :27 நவம்பர் 2025, 11:10 am IST

இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்தப் படத்தில், நடிகர்கள் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், சில ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது.

தற்போது, அஞ்சானின் எடிட் செய்யப்பட்ட புதியு வடிவம் நாளை (நவ. 28) மறுவெளியீடாகிறது.

இந்த நிலையில், இதற்கான நிகழ்வில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “அஞ்சான் திரைப்படம் 11 ஆண்டுகளுக்கு முன் வெளியானபோது மிகப்பெரிய கேலி, கிண்டல்களைச் சந்தித்தது. இன்று, நிறைய படங்கள் ட்ரோல் செய்வதற்கு முன்பே அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான். ஆனால், நான் சந்தித்த பல ரசிகர்கள் அஞ்சான் தங்களுக்குப் பிடித்திருந்தாகவே சொன்னார்கள். ஒரு படத்தை எடுப்பது மட்டுமே இயக்குநர் கையில் உள்ளது.

அது என்னவாக மாறும் என்பது தெரியாது. அஞ்சானை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டபோது மீண்டும் சவால் விடுவதற்காக அல்ல. வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல. உண்மையான சூர்யா ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் ஒரு திருப்திக்காகவும் அஞ்சானை மறுவெளியீடு செய்கிறோம். இப்படம் 2 மணி நேரம் ஓடக்கூடிய வடிவமாகத் திரைக்கு வருகிறது”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.