தல போல வருமா... மறுவெளியீட்டில் அசத்தும் அஜித்தின் அட்டகாசம்!

நடிகர் அஜித்தின் அட்டகாசம் படத்தின் மறுவெளியீடு குறித்து...
AK Fans Are On A Crazy High
அட்டகாசம் படத்தினைக் கொண்டாடும் ரசிகர்கள். படங்கள்: எக்ஸ் / அஜித் ஃபேன்ஸ் கிளப்.
Updated on
1 min read

நடிகர் அஜித்தின் அட்டகாசம் திரைப்படம் இன்று (நவ.28) மறுவெளியீடாகியுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டை தமிழ்நாடு மட்டுமில்லாமல் பெங்களூரிலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான அட்டகாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

காதல் மன்னன், அமர்க்களம் படத்துக்குப் பிறகு அஜித் சரண் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் களமிறங்கி ஹாட்ரிக் வெற்றி பெற்றார்கள்.

அஜித்துக்கு தல என்ற அடைமொழியும் இந்தப் படத்தில்தான் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் போலவே பெங்களூரிலும் அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பைக் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary

Actor Ajith's film Attakasam has been re-released today (Nov. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com