

கோவாவில், நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று (நவ. 28) நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ஐயம் கேம் முதல் பார்வை போஸ்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.