

நடிகை துஷாரா விஜயன் முதல்முறையாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
காட்டாளன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இவர் இணைந்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் கவனம் ஈர்த்த துஷாரா ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன், தனுஷின் ராயனிலும் நடித்து புகழ்பெற்றார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார்.
க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை பால் ஜியார்ஜ் இயக்கியுள்ளார்.
பான் இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு காந்தாரா இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.