நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

சோனம் கபூர் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :1 அக்டோபர் 2025, 5:49 pm IST

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்த சோனம், 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்குத் தாயானார். இதற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சோனம் கபூர், மீண்டும் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கணவருடன் சோனம் கபூர்

கணவருடன் சோனம் கபூர் - படம் - இன்ஸ்டாகிராம்

கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் உருவான பிலின்ட் படத்தில் முதன்மை பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார். தற்போது கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிது இடைவேளை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் இவர் நடித்த ராஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனால், தமிழிலும் சோனம் கபூர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Sonam Kapoor Pregnant Expecting Second Child With Anand Ahuja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.