பைசன் புதிய பாடல் அப்டேட்!

பைசன் புதிய பாடல் அப்டேட்!

பைசன் காளமாடன் திரைப்படத்தின் ‘தென்னாடு’ எனும் புதிய பாடலின் வெளியீடு குறித்து...
Published on

இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் துருவ் விக்ரம் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள, ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் 4 ஆவது பாடல் நாளை (செப். 02) மாலை வெளியாகின்றது.

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘பைசன் காளமாடன்’. தென் மாவட்டங்களில் உள்ள கபடி வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதுவரை இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, ‘றெக்க றெக்க’, ‘சீனிக்கல்லு’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பைசன் காளமாடன் திரைப்படத்தின் 4 ஆவது பாடலான, தென்னாடு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

Summary

The 4th song of the movie 'Bison Kaalamadan', by director Mari Selvaraj and actor Dhruv Vikram, will be released tomorrow evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com