ஜீவாவின் புதிய படப்பெயர்!

ஜீவா - 45 போஸ்டர்...
ஜீவாவின் புதிய படப்பெயர்!
Published on
Updated on
1 min read

நடிகர் ஜீவாவின் 45-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தவருக்கு கற்றது தமிழ், ஈ, ரௌத்திரம், என்றென்றும் புன்னகை படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. இறுதியாக, கடந்த 2024-ல் வெளியான பிளாக் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Summary

actor jiiva's thalaivar thambi thalamaiyil poster out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com