
இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்தனர்.
இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது.
6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று(செப். 30) தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிக்க: கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.