மறுவெளியீடாகும் நாயகன்!

மறுவெளியீடாகும் நாயகன்!

நாயகன் மீண்டும் திரைக்கு வருகிறது...
Published on

நடிகர் கமல் ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் மறுவெளியீடாகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேலுநாயக்கர் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். 

இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற நவ. 7 ஆம் தேதி நாயகன் திரைப்படத்தை மறுவெளியீட செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

actor kamal haasan's nayakan movie rerelease on november 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com