
பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடரின் புதிய பருவங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்டீவன் நைட் எழுதிய கதைகளின் அடிப்படையில் உருவான பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்கள் உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்தன.
இந்த நிலையில், புதிய கதைகளத்துடன் மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ் தொடர்கள் படம்பிடிக்கப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 1953 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகும் இந்தப் புதிய இணையத் தொடர் 2 பருவங்களாக (சீசன்) வெளியாகவுள்ளன.
இதில், ஒவ்வொரு பருவத்திலும் 6 எபிசோடுகள் வெளியாகும் எனவும், ஒவ்வொரு எபிசோடுகளும் 1 மணிநேரம் நீளமுடையதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் புதிய தொடரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பீக்கி பிளைண்டர்ஸ் கதைகளின் அடிப்படையில் நடிகர் சிலியன் மர்ஃபி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.