

இட்லி கடை, காந்தாரா சாப்டர் - 1 திரைப்படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் தனுஷ், ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படங்களான இட்லி கடை மற்றும் காந்தாரா சேப்டர் - 1 ஆகியவை சில நாள்களுக்கு முன் வெளியாகின.
இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததால், கிராமப் பின்னணியை மையமாக வைத்து உருவான இட்லி கடை முதல் மூன்று நாள்களில் இந்தியளவில் ரூ. 25 கோடியையும் காந்தாரா சாப்டர் - 1 ரூ. 120 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இரண்டு படங்களுக்குமான டிக்கெட் விற்பனையும் அதிகரித்திருப்பதால் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காந்தாராவுக்கு இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால் இப்படம் இன்னும் சில நாள்களிலேயே ரூ.500 கோடியை வசூலிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.