
எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து நடனக் கலைஞர் ரம்யா ஜோ, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞரான இவர், ஆசிரமத்தில் தனித்து வளர்ந்ததால், நடிகையாகி பல உறவுகளைச் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
இவரின் உண்மையான பெயர் ஸ்டெல்லா. மைசூரைச் சேர்ந்த இவர், படிக்க வைக்க நபர்கள் இல்லாததால் ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். தனது பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்ததால், 2 வயது முதலே தனது இரு சகோதரிகளுடன் ஆசிரமத்தில் வளர்ந்தவர்.
படிக்க போதிய பொருளாதார சூழல் இல்லாததால், பணத்திற்காக ஆடல், பாடல் நடன நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த அனுபவத்தால் சினிமா மீது கனவுகளை வளர்த்துக்கொண்டார்.
அதனை நோக்கிய முயற்சியாக பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆசிரமத்தில் தனியாக வளர்ந்ததால், பிக் பாஸ் வீட்டில் 10 - 15 பேரும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் செல்வதாக அறிமுக நிகழ்ச்சியில் கூறினார்.
பிக் பாஸ் மூலம் கிடைக்கும் பணம் எனது இரு சகோதரிகளுக்காக செலவிடுவேன் என்றும் இதனையே குறிக்கோளாகக் கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை குறித்து நம்பிக்கையுடன் பேசிய ரம்யா ஜோவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது எனக் கூறி பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாகத் தொடங்கியது. விஜய் சேதுபதி இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதையும் படிக்க | தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.