
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் வெளியான 3 நாள்களில் ரூ. 235 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் -1 திரைப்படம், அக். 2ஆம் தேதி வெளியானது.
ருக்மினி வசந்த் நாயகியாக நடித்திருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் ரூ. 150 கோடி வரை வசூலித்திருந்தது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திரையரங்குகள் அதிகமாக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக்கொண்டிருப்பதால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 235 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எளிய பின்னணியில் இருந்து பிக் பாஸ் சென்ற ரம்யா ஜோ! யார் இவர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.