
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள எஃப்.ஜே. அதிசயத்துக்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாக நேற்று (அக். 5) தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், திவாகர், அரோரா சின்கிளேர் ஆகியோருக்கு அடுத்தபடியாக பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே., 3வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவரின் முழுப்பெயர் ஃபெட்ரிக் ஜான்.
பீட்பாக்ஸ் கலைஞர் என்பதால், ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்துள்ளார். தனியிசைப் பாடல்களை இசையமைத்து தற்போது திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஆதி, பல இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ள எஃப்.ஜே.வுக்கு, ஹிப்ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,
''கையில் மைக் வைத்துக்கொண்டு நிற்குன் சிறுவனாக இருந்தது முதலே எஃப்.ஜே.வை எனக்குத் தெரியும். பீட்பாக்ஸ் மூலம் தனது கனவுகளை துரத்திக்கொண்டு இருப்பவர். என்றுமே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர். அதனால், மிகப்பெரிய உயரங்களை விரைவில் அடைவார். ஒருநாள் திடீரென இணையத் தொடரில் இவன் நடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இது எப்போது இருந்துடா என்று கேட்டதற்கு, நடிகன் ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவு எனக் கூறினான். அவனுடைய கனவு என்றுமே அதனை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது.
சாலைகளில் இருந்தது முதல் தற்போது மேடையேறியவது வரை அவரைப் பார்த்துள்ளேன். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். உண்மையாக இரு. பணிவுடன் உன்னை வைத்துக்கொள். முதல் நாளில் இருந்தே உனக்குள் நாங்கள் கண்ட திறமையை இந்த உலகம் பார்க்கட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.