
நடிகர் இளவரசு நடிகர் ராஜ்கிரண் குறித்து பேசியுள்ளார்.
நடிகர்கள் தனுஷ், ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இட்லி கடை திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது.
இந்த வெற்றிக்காக நடிகர் தனுஷ் தன் சொந்த ஊரில் கிடா வெட்டி மக்களுக்கு விருந்தளித்தார். இதுவரை ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு, “தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகரென்றால் அது ராஜ்கிரண்தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எவ்வளவோ பேர் வேட்டியை மடித்துக்கட்டி நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜ்கிரணின் தோற்றம் எவருக்கும் அமையவில்லை. தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தீபாவளி காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். அப்படத்தில் எனக்கு காது கேட்காது. காசு இல்லாமல் தீபாவளியை எதிர்கொள்ளும் நிலையில், அரசியல்வாதிக்கு போஸ்டர் ஒட்டும் வாய்ப்பு வரும்.
அக்காட்சியில் ராஜ்கிரண் ஓடிவந்து என்னைக் கூப்பிட்டு, போஸ்டர் ஒட்ட அழைத்துச் செல்வார். அக்காட்சியை எடுக்க 3 மணி நேரம் ஆனது. காட்சியின் இறுதியில் ராஜ்கிரண் வசனம் பேசப்பேச நான் நிஜமாகவே அழுதுவிட்டேன். அக்கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். அப்படியொரு நடிகர். இட்லி கடையிலும் அவர் நடிப்பை பார்த்து பழைய காலத்திற்குச் சென்றதுபோல் ஆகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எனக்கு மரியாதை வேண்டாமா? சிம்பு குறித்து விஜய் சேதுபதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.