நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சிலம்பரசன் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி ஏஸ், தலைவன் தலைவி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு, ’ஸ்லம் டாக்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
தற்போது, பிக்பாஸ் - 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று (அக். 5) நடைபெற்றது. இதில், போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
நிகழ்வின்போது போட்டியாளர் ஒருவர் தன்னை நடிகர் சிலம்பரசனின் ரசிகர் எனக் கூறினார்.
இதைக்கேட்ட விஜய் சேதுபதி, “என் மகனும் எஸ்டிஆர் ரசிகன் எனச் சொல்லிக்கொண்டே இருப்பான். வீட்டிலேயே ஒரு நடிகராக இருக்கும் எனக்கு மரியாதை வேண்டாமா?” என நகைச்சுவையாகக் கூறினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.