சிம்பு - வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் எஸ்டிஆர் - 49 படத்தின் புரோமோ படப்பிடிப்பு முடிவடைந்து பல நாள்கள் ஆகிவிட்டது. ஆனால், அறிமுக விடியோ மட்டுமே வெளியாகியுள்ளது.
படத்தின் புரோமா அக். 4 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் காரணங்களால் வெளியாகவில்லை எனத் தெரிகிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்டிஆர் - வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் பைசன், டீசல் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளிலும் புரோமோ திரையிடப்பட உள்ளதாம்.
இதையும் படிக்க: சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.