மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3.40 மணி நேரம்! ஒரே பாகமாக திரைக்கு வரும் பாகுபலி எபிக்!

ஒரே திரைப்படமாக திரைக்கு வரும் பாகுபலி 2 பாகங்கள்...

News image
Updated On :7 அக்டோபர் 2025, 7:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைந்து ஒரே திரைப்படமாக வெளியிடுகின்றனர்.

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் பாகுபலி. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை யோசிக்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.

இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து பாகுபலி தி எபிக் பெயரில் வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், “பாகுபலி 1 மற்று 2-யை 3.40 மணி நேரம் ஓடக்கூடிய ஒரே திரைப்படமாக திரைக்குக் கொண்டு வருகிறோம். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் நீக்கப்பட்டு கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதை இடைவேளைக் காட்சியாகவும் மீதமுள்ள கதையை இரண்டாம் பகுதியாகவும் இணைந்துள்ளோம். இதனால், பாகுபலியை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடுவதற்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

bahubali 1 and 2 parts are combined as single part movie titled as bahubali the epic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.