
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 தொடக்க நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 20 போட்டியாளர்களை அறிமுகம் செய்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அவர்களை வீட்டுக்குள் அனுப்பிவைத்தார்.
இந்த சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் இரவே, பிசியோதெரபிஸ்ட் என்பவர் மருத்துவரா? இல்லையா? என்ற வாதம் திவாகருக்கும் கெமிக்கும் இடையே ஏற்பட, இறுதியில் மோதலில் முடிவடைந்தது. தொடர்ந்து, மறுநாள் காலை குரட்டை விவகாரத்தில் திவாகருக்கும் பிரவீனுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வுக்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் ப்ரோமோவில், திவாகருக்கும் ரம்யாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது கோபமடைந்த திவாகர் கத்திப் பேசியுள்ளார். உடனே, கத்தும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று திவாகரைப் பார்த்து பேசியுள்ளார். இதையடுத்து, “மரியாதையாக பேசு, நீயெல்லாம் படித்து இருக்கிறாயா? இல்லையா?” என ரம்யாவை பார்த்து திவாகர் கேட்கிறார்.
இதையடுத்து திவாகரின் கருத்து தெரிவிப்பு தெரிவித்து திவாகருடன் சகப் போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இரண்டாவது ப்ரோமோவில் ரம்யாவுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவர்களைப் பார்த்து நியாமாக நடந்துகொள்ளுங்கள் என்று திவாகர் கூறுகிறார். தொடர்ந்து, வாக்குவாதம் முற்றிய நிலையில், திவாகரை அடிக்க எஃப்.ஜே. கை ஓங்குவது போன்றும், கம்ரூதின் திவாகரை தள்ளிவிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டி தொடங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.