இணையத் தொடரில் நாயகனாகும் சீரியல் நடிகர்!

திருமணம், வள்ளியின் வேலன் ஆகிய தொடர்களில் நடித்த சித்து, இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளது குறித்து..
சித்துவும் தீபிகாவும்
சித்துவும் தீபிகாவும்படம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

கல்யாணம் டும் டும் டும் என்ற இணையத் தொடரில் நடிகர் சித்து நாயகனாக நடிக்கவுள்ளார். திருமணம், வள்ளியின் வேலன் ஆகிய தொடர்களில் நடித்த இவர், தற்போது இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் நாயகனாக நடித்தவர் சித்து. இத்தொடரில் நாயகியாக நடித்த ஸ்ரேயா அஞ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமண வாழ்வில் இணைந்ததாக பலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து வள்ளியின் வேலன் என்ற தொடரிலும் நடித்தனர். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்ட சித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

தற்போது, இவர் புதிய இணையத் தொடரில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கல்யாணம் டும் டும் டும் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில், தீபிகா தாமு நாயகியாக நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் இணையத் தொடரில் தீபிகா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | யூடியூபர்கள் கேவலமானவர்களா? திவாகரின் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

Summary

siddhu deepika dhamu in Kalyanam dum dum dum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com